
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் கரீனா கபூர், தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா கைப், கிருத்தி சனோன், கங்கனா ரனாவத் ஆவர். இவர்களுக்கென ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நடிகைகள் அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றது.
அந்த வகையில் தீபிகா படுகோன் ஒரு படத்திற்கு அதிகபட்சமாக 20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இதைத்தொடர்ந்து ஆலியா பட் ஒரு படத்திற்கு 15 கோடி வரை வாங்குகிறார். இதையடுத்து கரீனா கபூர் ஒரு படத்திற்கு அதிகபட்சமாக 11 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இதற்கு அடுத்தபடியாக நடிகை கத்ரீனா கைப் மற்றும் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதன் பின் மற்ற நடிகைகள் அதிகபட்சமாக 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.