
சினிமாத்துறையில் ஹீரோக்களைப் போல், நல்ல ஹிட் கொடுக்கும் இயக்குனர்களுக்கு அதிகமான சம்பளம் உயர்வு என்பது அளிக்கப்படும். இந்நிலையில் ரஜினி நடிக்கும் கூலி படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜுக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு நெல்சனுக்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் லோகேஷ் மற்றும் நெல்சன் கோடிகளில் புரளுவதால் அட்லியும் தன்னது பங்கிற்கு சம்பளத்தை 50 கோடி ரூபாய் வரை உயர்த்தி விட்டதாக சொல்லப்படுகிறது.