
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் திருமண வாழ்க்கை சிக்கலில் சிக்கியுள்ளதாக வரும் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுபூர்வமாக பதிவிட்டுள்ளார்.
தனது மௌனத்தை பலவீனமாகவும், உண்மை மறைப்பதற்கான முயற்சியாகவும் சிலர் தவறாகப் புரிந்து கொள்வதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார். தான் கண்ணியமாக இருப்பதால் தன்னை மோசமாக சித்தரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருமணத்தின் புனிதத்தை மதிக்கும் தன்மை கொண்டவர் என்றும், தனது கணவர் ஜெயம் ரவியுடன் தனிப்பட்ட முறையில் பேசி இந்த விவகாரத்தைத் தீர்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆர்த்தியின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஏற்படுத்தியுள்ளது.