டெல்லியில் துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா தலைமையில் மந்திரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சிசோடியா கூறியதாவது, டெல்லியில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களது உயிர்களைப் பற்றி கூட கவனம் கொள்ளாமல் மனித இனம் மற்றும் சமூகம் பாதுகாக்கப்பட்ட கொரோனா கால களப்பணியாளர்கள் சுயநலமில்லாமல் உயிர் தியாகம் செய்துள்ளனர். எந்த ஒரு தொகையும் அவர்களது குடும்பத்தினருக்கு ஈடாகாது.

ஆனால் இந்த தொகையை பெறுவதன் மூலமாக அவர்கள் ஒரு கண்ணியமிக்க வாழ்வை வாழ்வதற்கான அர்த்தம் நிச்சயம் ஏற்படுகிறது. மேலும் கொரோனா காலகட்டத்தில் களப்பணியாளர்களின் குடும்பத்தினரின் ஒவ்வொரு தேவைகளுக்கும் அரசு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துள்ளனர் என அது குறித்த அறிக்கை தெரிவிக்கிறது. அதன்படி கொரோனா காலகட்டத்தில் சமூகத்திற்கு களப்பணியாற்றி  உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடியை டெல்லி அரசு வழங்கும் என சிசோடியா அறிவித்துள்ளார்.