
உள்துறை மந்திரி அமித்ஷா திமுக 36,000 கோடி வரை ஊழல் செய்துள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலினும் முதல்வர் ஸ்டாலினும் ஊழல்வாதிகள் என்றும் கடுமையாக விமர்சித்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணியையும் உறுதிப்படுத்தினார். தற்போது முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஜெயலலிதா ஊழல் வழக்கில் இரண்டு முறை பதவி இழந்து நான்கு வருஷங்கள் ஜெயில் தண்டனை பெற்றுள்ளார். இப்படிப்பட்ட அதிமுகவை மேடையில் வைத்துக் கொண்டே அமித்ஷா ஊழல் பற்றி பேசியதை கேட்டு தமிழ்நாடு மக்கள் சிரிக்கிறார்கள்.
அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்ததே ஊழல் தான் என்பதை மக்கள் அறிவார்கள். 2 ரெய்டு நடந்தவுடன் அதிமுகவை அடமானம் வைத்தவர்கள் அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். பழைய கொத்தடிமை கூடாரம் ஆன அதிமுகவின் தலைமையை பணிய வைக்க தன்னுடைய சதி திட்டங்களை பாஜக நிறைவேற்ற பார்க்கிறது. பாஜக தனியாக வந்தாலும் எவர் துணையோடு வந்தாலும் தக்க பாடம் புகட்ட தமிழ்நாடு மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.