மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திண்டோரியில் லால்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு தரம் சிங் மராவி என்பவரின் குடும்பம் வசித்து வந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கும் இன்னொரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு மற்றும் பகை இருந்துள்ளது. இந்த பகையில் கடந்த 31ஆம் தேதி தரம் சிங் மற்றும் அவருடைய மகன்கள் இருவரை மிகவும் கொடூரமான முறையில் வெட்டினர். இதில் தரம்சிங் (65) உயிரிழந்த நிலையில் அவருடைய மகன் ரகுராஜூ (40) என்பவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மற்றொரு மகன் சிவராஜ் (40) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவர் படுக்கையில் உயிரிழந்த நிலையில் சிவராஜ் மனைவி அவர் இறந்த ரத்தத்தை படுக்கையில் இருந்து சுத்தம் செய்துள்ளார்.

அவர் 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவர் ஒருவர் கூறும் போது நாங்கள் ரோஷினியை மருத்துவமனை படுக்கையை சுத்தம் செய்யுமாறு கூறவில்லை என்றும் ஆதாரங்களை சேகரிப்பதற்காக அவர்தான் அப்படி செய்தார் என்றும் கூறியுள்ளார். மேலும் அவருடைய கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.