
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் ஒரு வாலிபர் மதுபோதையில் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் கொடுக்க மறுத்த பெண்ணை அந்த வாலிபர் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். அதனை தடுக்க முயன்ற பெண்ணின் கணவருக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை அடுத்து தப்பி ஓடிய வாலிபரை அந்த பகுதி மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அவரது கணவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்