
மும்பை அருகே உள்ள நல்லசோபரா பகுதியைச் சேர்ந்த சிறுமி அக்டோபர் 5 ஆம் தேதி, வழக்கம்போல டியூசனுக்கு சென்றார். அப்போது, 20 வயதான டியூசன் ஆசிரியர் ரத்னா சிங், சிறுமியின் கன்னத்தில் பலமாக இருமுறை அடித்துள்ளார். இதில், சிறுமியின் கம்மல் கன்னத்துக்குள் சென்றது. இதனையடுத்து மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனைகளில், சிறுமியின் மூளையில் காயம் இருப்பது, தாடையில் மற்றும் மூச்சுக் குழாயிலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இதன் விளைவாக சிறுமி தற்போது வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார். மருத்துவர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரத்னா சிங் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தின் முழு விவரங்களையும் வெளிக்கொண்டு வர காவல் துறையினர் முயற்சிக்கின்றனர்.