மேற்குவங்க மாநிலத்தில் முசிதாபாத் மாவட்டத்தில் ஒரு சிறுமி வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் தினப்பந்து ஹைதர் என்பவர் பூ தருவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் சிறுமியை கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். பின்னர் உயிரிழந்த சிறுமியின் சடலத்தோடு உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு சுபோஜித் என்பவர் உதவியாக இருந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஜான்கிபூர் கூடுதல் செசன் நீதிமன்றம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கின் குற்றவாளியான தினபந்து ஹல்தருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு உதவியாக இருந்த சுபோஜித்திற்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.