
பெலகாவி சிக்கோடி பகுதியை சேர்ந்த பாக்யஸ்ரீ – ராகுல் தம்பதிக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றனர். இவர்களுக்கு சாத்விக்(5) என்ற குழந்தை இருந்தது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ராகுல், அடிக்கடி சண்டைகள் போட்டுக்கொண்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு இத்தம்பதிகளிடையே கடுமையான சண்டை ஏற்பட்டதால், கோபமடைந்த பாக்யஸ்ரீ, மகனை அழைத்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
அங்கு சென்ற ராகுல், பாக்யஸ்ரீயை சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆனால், நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கொண்ட பாக்யஸ்ரீ, உறங்கிக் கொண்டிருந்த தனது மகனை கத்தியால் குத்தி கொலை செய்தார். அதன்பின் அவரும் தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம்பக்கத்தினர் அந்த சத்தத்தை கேட்டு விரைந்து வந்து, குழந்தையும் பாக்யஸ்ரீயும் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தற்கொலைக்கு முயன்ற பாக்யஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காக்வாட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.