
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜினி பகுதியில் பட்ட பகலில் சாலையில் வைத்து ஒருவர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ளவர்கள் தடுக்க முயற்சிக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததோடு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக கட்சி ஆட்சி செய்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பாலியல் பலாத்காரம் செய்த லோகேஷ் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர்.
அந்த வாலிபர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்ததோடு இது குறித்து வெளியே சொல்லக்கூடாது எனவும் பெண்ணை மிரட்டியுள்ளார். மேலும் லோகேஷனை கைது செய்து விசாரித்ததில் அவர் மது ஊள்றி கொடுத்து பெண்ணை கற்பழித்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.