
உத்திரபிரதேசம் மாநிலத்தில் சிறுமி ஒருவருக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது உத்திரபிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியை அவருடைய தந்தை, தாத்தா மற்றும் மாமா ஆகியோர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததில் இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தன்னுடைய உறவுக்கார பெண்ணுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இது பற்றி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அலோக் மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சிறுமியை அவருடைய தந்தை, தாத்தா மற்றும் மாமா ஆகியோர் பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதைத்தொடர்ந்து அவர்கள் மூவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மூவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.