மேற்குவங்க மாநிலத்தில் உள்ள போங்கானில் உள்ள ஒரு பகுதியில் நடந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் என்பது அதிகரித்துவரும் நிலையில் ஆண் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லையா என்ற சந்தேகத்தை இந்த சம்பவம் எடுத்துரைக்கிறது. அதாவது தீபிகா பிஸ்வாஸ் என்ற 28 வயது பெண் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இந்தப் பெண் தன்னுடைய உறவுக்கார சிறுவன் ஒருவனை முதல் முறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ள நிலையில் அதனை தன் செல் ஃபோனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி தொடர்ந்து அந்த பெண் சிறுவனை பலாத்காரம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கொடுமை தாங்காமல் அந்த சிறுவன் தன் தாயாரிடம் நடந்த சம்பவங்களை கூறவே அதைக் கேட்டு பதறிப்போன தாயார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீபிகாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.