
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். தமிழக வெற்றிக்கழக கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நடிகர் விஜய் முதல்முறையாக மாநாட்டை மிகப் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளாராம். அதன்படி முதல் மாநாடு விக்கிரவாண்டி அல்லது சேலம் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஜயின் கட்சியின் கொடி ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியாகிறது. இதற்காக சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தற்போது சுமார் 40 அடி உயரத்தில் கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 22 ல் கொடி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த விழாவில் சுமார் 250 பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இதற்கான ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்து வருகிறாராம்.