பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் வெளியான ‘குபேரா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.

அதன் தொடர்ந்து, ‘தி கேர்ள்பிரண்ட்’ படத்தில் நடித்து வருவதுடன், ‘கிரிக்பார்ட்டி’ படம் மூலமாக கன்னட சினிமாவில் புகழ் பெற்றவர். திரையுலகில் இடைவிடாது முன்னேறி வரும் அவர், சமீபத்திய ஒரு நேர்காணலில் தெரிவித்த கருத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அந்த நேர்காணலில் ராஷ்மிகா கூறியதாவது, “கொடவா சமூகத்தில் இருந்து சினிமா துறையில் நுழைந்த முதல் பெண் நடிகை நான்தான்” என்பதுதான். இந்தக் கருத்து திரையுலகத்திலும் சமூக வட்டாரத்திலும் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில், ராஷ்மிகாவுக்கு முன்னரே கொடவா சமூகத்தைச் சேர்ந்த பலர் சினிமாவில் செயல்பட்டு வருகிறார்கள் என்பது உண்மை.

ராஷ்மிகாவை விட முன்னதாகவே திரை உலகில் பங்களித்து வரும் ஆண்ட பிரேமா, தஸ்வினி, கரும்பையா, ரீஷ்மா, ஸ்வேதா, நானையா, வர்ஷா பொல்லம்மா, நிதி சுப்பையா, அஸ்வினி நாச்சப்பா, ஹர்சிகா பூனாச்சா, சுப்ரா அய்யப்பா ஆகியோர் கொடவா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து, ராஷ்மிகாவின் கூற்று உண்மைக்கு புறம்பானதாக உள்ளது என்பதையும், இது கொடவா சமூகத்தினரின் பங்களிப்புகளை மறுக்கும் விதமாக உள்ளதாகவும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.