
நாம் வீட்டில் அடிக்கடி செய்யும் உணவுகளில் ஒன்று தான் இட்லி. இந்த இட்லியில் கட்டாயம் நாம் உளுந்து அரிசி போட்டு அரைப்பது தான் வழக்கம். ஆனால் மாவு பொலிவாக வருவதற்கு அரிசியை தவிர வேறு என்ன சேர்க்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இட்லி ஆவியில் வேகவைத்து உண்பதால் அது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. பார்லி என்பது அனைவருக்கும் தெரிந்த தானியம்தான்.
இதனை அரிசிக்கு பதிலாக சேர்த்தால் அரிசி மாவு பொலிவாக வருவதுடன் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்யும். சாதாரண மாவில் ஒரு கரண்டி மாவு ஊற்றினால் தான் ஒரு அளவான இட்லி கிடைக்கும். ஆனால் பார்லி சேர்த்து அரைத்த மாவின் பொலிவு அதிகமாகி நீங்கள் அரை கரண்டி மாவில் எப்போதும் போல ஒரு இட்லியை பெறலாம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இந்த மாவில் செய்யும் உணவுகள் சாப்பிடுவது நன்மை அளிக்கும். மைக்ரோ ஊட்டச் சத்தான துத்தநாகம் இதய செயல்பாட்டை ஊக்குவித்து மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வரும் ஆபத்தையும் குறைக்கிறது. எனவே அரிசிக்கு பதில் பார்லியை சேர்த்து இட்லி மாவு செய்வதால் பொலிவான மற்றும் சத்தான இட்லியை பெறலாம்.