கடந்த வியாழக்கிழமை மதியம் 12.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது பெண்ணின் கணவரும் குழந்தையும் வீட்டில் இல்லாத நேரத்தில் அருகில் வீடுகள் எதுவும் இல்லாததால் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஷ்ணு குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அந்தப் பெண் சமையல் அறைக்கு சென்ற போது உள்ளே நுழைந்து பலாத்காரம் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடினார். அந்தப் பெண் அப்பகுதியினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் விஷ்ணுவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனவும் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.