பொதுவாகவே வீடுகளில் நாய்கள் மற்றும் பூனைகளை செல்லப்பிராணிகளாக பலரும் வளர்த்து வருகின்றனர். இவை சில நேரங்களில் வீட்டில் செய்யும் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கும் நிலையில் அதனை பலரும் வீடியோவாக இணையத்தில் வெளியிடுகின்றனர்.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் உரிமையாளருடன் வெளியில் செல்வதற்காக இரண்டு நாய்கள் அவருடன் காரில் ஏறி கொள்கின்றன. சிறிது நேரம் சென்றது உரிமையாளர் கார் ஓட்டுவதில் பிஸியாக இருக்கின்றார். காரில் ஏறிய இரண்டு நாய்களும் அண்ணாந்து தூங்கிக் கொண்டே பயணம் செய்கிறது. இந்த வீடியோ பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும் நிலையில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.