
பொதுவாகவே நமக்கு கொசுக்கள் என்றால் பெரும் தொல்லையாகத்தான் இருக்கும். இப்படி இருக்கையில் கொசுவுக்கு கோவில் கட்டி இருப்பதை கேட்பது வினோதமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. ஆனால் இது உண்மைதான். ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மோக்ஷகுண்டம் கிராமத்தின் PHC மனோகத்தில் கொசு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் எம். சதீஷ்குமார் என்பவர் 2008 ஆம் ஆண்டு ஐந்தாயிரம் ரூபாய் செலவில் கட்டினார் ஆனால் இங்கு கொசுவை வழிபடுவதில்லை. கொசுக்களால் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.