நித்யானந்தா விற்கு பிறகு தற்போது முன்னாள் நடிகை ரஞ்சிதாவும் இணையத்தில் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கி உள்ளார். ரஞ்சிதா, கைலாசா சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில், இந்த உலகின் கேம் சேஞ்சராக சுவாமி நித்தியானந்தா இருக்கிறார் என   கூறியுள்ளார். கைலாசாவில் வசித்து வரும் அவர், யூடியூப் மூலமாக மக்களுடன் உரையாடினார். கைலாசா முதல் இந்து தேசம். இங்கு எல்லாமே இலவசம்.

அனைவருக்கும் கல்வி இலவசம் என்பதில் சுவாமி நித்யானந்தா உறுதியாக இருக்கிறார். சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவை கைலாசாவில் இருப்பதாக பெண்கள் கூறுகின்றனர். கைலாசா எப்போதும் தர்மாவின் பக்கம் நிற்கும், அதில் எந்த சமரசமும் செய்யாது. வேறு எந்த மிரட்டலுக்கும், சமரசத்திற்கும் கைலாசாவில் இடமில்லை. இந்த உலகம் இரு முக்கிய மாற்றத்தை சந்தித்துள்ளது. ஒன்று ஏ.ஐ.டெக்னாலஜி-செயற்கை நுண்ணறிவு, மற்றொன்று சி.ஐ. -அண்ட நுண்ணறிவு, அது தான் கைலாசா.