
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அங்கீகரிக்கப்பட்ட ஆஷா எனப்படும் சமூக ஆர்வலர்களுக்கு மாத சம்பளம் 18,000 ரூபாயை வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆஷா பணியாளர்கள் கோடி சவுராஷ்டிராவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.
ஒரு கட்டத்தில் போலீசார் பெண்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றனர். அப்போது பெண்களை சந்தைக்கு ஆடுகளை ஏற்றி செல்வது போல கையைப் பிடித்து தர தரவென இழுத்துச் சென்று லாரியில் ஏற்றினர். அப்போது ஒரு பெண் சட்டென போலீசாரின் கன்னத்தில் அறைந்தார். இதனை பார்த்ததும் சக போலீசார் அந்த பெண்ணை அடிக்க விரைந்தனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.