உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடுரோட்டில் கையில் துப்பாக்கியுடன் இளம்பெண் நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகில் பிரபலமாக இருக்கும் சிம்ரன் யாதவ் என்ற அந்தப் பெண், தன்னை லக்னோவின் ராணி என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 22 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இவரை 20 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர்.