அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு 20 மாதமே ஆன கை குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் அவர் தன்னுடைய குழந்தையை சிகரெட் புகைக்கவும், மது குடிக்கவும் வற்புறுத்தும் சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை கண்ட சைல்ட் லைன் அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . இதன் பேரில் அந்த குடியிருப்பில் காவல்துறையினர் சோதனை செய்து குழந்தையை மீட்டுள்ளனர்.

அதோடு குழந்தையின் தாயை விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளனர். மேலும் விரிவான விசாரணைக்காக ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் குழந்தையை அன்பான மற்றும் பொறுப்பான குடும்பத்தில் தத்தெடுக்க வேண்டும் என்று ம், அவள் தாயாக இருக்க தகுதியற்றவள் என்றும், வெளிநாடுகளில் இப்படிப்பட்ட தாய்க்கு நீண்ட காலம் சிறை தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.