
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு பலர் பலத்த காயங்கள் உடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கேரளாவில் தற்காலிகமாக ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதோடு தொடர்ந்து மீட்ப பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வயநாடு பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பணிகளுக்காக ரூ.5 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்திலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள், 20 மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கள், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு கேரளாவிற்கு செல்ல இருக்கிறது.