
சென்னை அணியை வீழ்த்தி ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு அணியின் கேப்டன் டுப்ளசியை நட்சத்திர வீரர் விராட் கோலி முத்தமிட்டார். சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று வெற்றிபெற்று ஆர்சிபி அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இந்த வெற்றிக்கு அணியின் கூட்டு முயற்சியே காரணம் என்றாலும், கேப்டன் டுப்ளசி பிடித்த இந்த கேட்ச், போட்டியின் போக்கையே மாற்றியது. ஆட்டத்தின் 14.6ஆவது பந்தினை சிராஜ் வீச, சாண்ட்னர் எதிர்கொண்டார்.
அப்போது, அவர் அடித்த பந்தினை அசாத்தியமாக கேட்ச் பிடித்து அசத்தினார். இதனையடுத்து டுப்ளசி சாண்ட்னரின் கேட்ச்சை டுப்ளசி அசாத்தியமாக பிடித்த பின்னர் ஓடிவந்த கோலி, முதுகின் மேல் ஏறிக் கொண்டு முத்தமிட்டார். இந்த நிகழ்வு காண்போரை உருக வைத்தது. பின்னர், போட்டி முடிந்தபின் தனது மனைவி அனுஷ்காவுக்கு ப்ளேன் கிஸ் பறக்கவிட்டார் கோலி.