
இயக்குனர் நிதின் வேமுபதி நாயை மையமாக வைத்து எடுத்திருக்கும் திரைப்படம் கூரன். ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு சென்று போராடுவது போன்று கதைக்களம் அமையப்பெற்றுள்ள இந்த படத்தில் எஸ் ஏ சந்திரசேகர், சத்யன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் பயிற்சி பெற்ற போலீஸ் நாயான ஜான்சி தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. சமீபத்தில் படத்தின் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் வெளியிட்டு வாழ்த்தியிருந்தார். இந்நிலையில் கூரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.