பிரபல சினிமா விமர்சனம் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியிருப்பதாவது, சில நாட்களுக்கு முன்பு நடந்த விவாத நிகழ்ச்சியில் வீசிக்க எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் விஜயை கூத்தாடி என கோபமாக சாடினார். விவாத நிகழ்ச்சிகளில் நாகரீகமாக அமைதியாக பேசும் நபரில் இவரும் ஒருவர். ஆனால் இந்த முறை இப்படி ஒரு வார்த்தையை பேசிவிட்டார். சினிமா நடிகர்களை கட்சியில் சேர்ப்பது, பிரச்சாரத்திற்கு அழைப்பது, வெற்றிக்காக வாய்ஸ் தர சொல்லுவது, கட்சி மற்ற அரசு நிகழ்ச்சிகளில் பக்கத்தில் அமர வைப்பது, அவர்களின் படங்களை முந்தைய ஷோ பார்ப்பது.

அரசியல் மேடைகளில் நடிகர்களைப் போல உள்ளவர்களை ஆட வைப்பது என அனைத்திற்கும் அவர்களைத்தான் அழைக்கிறீர்கள். உங்கள் தலைவர் கூட படங்களில் நடித்துள்ளார். பிரிவியூ ஷோ பார்த்து விட்டு விமர்சனம் கூறுகிறார். அப்போதெல்லாம் நடிகர்கள் மீது உங்களுக்கு கோபம் வரவில்லையா? கூத்தாடி என்ற வார்த்தை உங்களைப் போன்ற சட்டம் படித்தோருக்கு கூட இழிவான சொல்லாக மாறியதா? வேறு துறையை அல்லது சமூகத்தை சேர்ந்தவர் இப்படி பேசி இருந்தால் போராட்டம் வெடித்திருக்கும்.

நீங்களும் மன்னிப்பு கேட்டிருப்பீர்கள். ஆனால் சினிமாக்காரர்களிடம் ஒற்றுமை இல்லை. இதனால் இப்படி பேசிள்ளீர்கள். இதை கண்டிக்க ஒரு நடிகருக்கு கூட திராணி இல்லை. இதில் ஆச்சரியம் கிடையாது. நேற்று நடந்த சினிமா நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஆர்வி உதயகுமார், பேரரசு ஆகியோர் மட்டும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். வரும் தேர்தலில் சினிமா சம்பந்தப்பட்ட எவரும் உங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டாம். எங்களுடன் மேடை ஏற வேண்டாம். இனி சினிமா சாதனை நிகழ்வுகளில் நாங்கள் பங்கேற்பதில்லை என உறுதி அளிக்க முடியுமா? உங்களது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பீர்களா? என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு அதிகமாக பகிரப்படுகிறது.