
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய சாலையில் மேல்தட்ட பள்ளம் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் வனப்பகுதியை ஒட்டி தேயிலை தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலை அலுவலர் குடியிருப்பு பகுதியில் 3 கூண்டுகளில் வளர்ப்பு நாய்கள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில் நேற்று காலை சிறுத்தை ஒன்று அந்த பகுதிக்கு வந்துள்ளது.
அங்கே கூண்டில் அடைக்கப்பட்டிருந்த வளர்ப்பு நாய்களை வேட்டையாட சிறுத்தை முயன்றுள்ளது. ஆனால் பாதுகாப்பாக நாய்கள் கூண்டுக்குள் இருந்ததால் சிறுத்தையால் வேட்டையாட முடியவில்லை. இதனால் சிறிது நேரம் கூண்டை சுற்றி சுற்றி வந்த சிறுத்தை பிறகு ஏமாற்றத்துடன் திரும்பியது. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு குடியிருப்பில் இருந்தவர்கள் தங்களுடைய செல்போனில் இதனை வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.