தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் மட்டுமே அயல் பணி வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்க பணியாளர்கள் அயல் பணி அடிப்படையில் வேறு சங்கங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்படலாம் எனவும் அயல் பணி நியமனம் என்பது குறைந்தபட்சம் ஓராண்டுக்கும் அதிகபட்ச 3 வருடங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சங்கத்தில் எந்த பதவியை வகித்தாரோ அதே பதவியை தான் அயல் பணி அடிப்படையிலும் மாற்று சங்கத்திலும் வகிக்க முடியும். அயல் பணியில் செல்லும் பணியாளர் ஏற்கனவே பணியாற்றிய சங்கத்தில் பெற்ற கடன் மற்றும் முன்பணங்களை புதிதாக சேரும் சங்கத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.