தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாகவும், பொருட்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது ஆறு கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும் ஒரு சில கடைகளில் பொருட்களுக்கு கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்துள்ளனர். இதனால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆறு கடைகளுக்கும் ஒட்டுமொத்தமாக 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.