
தெலுங்கானா மாநிலம், சூர்யா பேட்டை, தருண் நகரைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் பிரமோத், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழகி வந்தனர். அந்த தோழியால் மற்றொரு இளம்பெண்ணுடன் இவர்கள் அறிமுகமானனர். இதனை தொடர்ந்து, ஹரிஷ் உள்ளிட்ட நால்வரும், அவர்களுடன் அடிக்கடி சினிமா செல்வது, ஊர் சுற்றுவது போன்ற உறவுகளை வளர்த்தனர். சில நாட்களுக்கு முன்பு, பிறந்தநாள் விருந்து வைப்பதாக கூறி, அந்த இளம்பெண்ணை ஹைதராபாத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, வற்புறுத்தி மது குடிக்க வைத்து, அவருக்கு போதை ஏற்றிய பிறகு, ஹரிஷ் மற்றும் பிரமோத் இருவரும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், நிர்வாண நிலையில் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை மொபைலில் பதிவு செய்து, அதை பயன்படுத்தி மிரட்டல் விடுத்தனர். யாரிடமும் சொல்லினால் கொலை செய்துவிடுவோம், பணம் தர வேண்டும், எப்போது அழைத்தாலும் வர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இளம்பெண் இவர்களின் தொல்லையை தாங்க முடியாமல், போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் ஹரிஷ், பிரமோத் மற்றும் அவர்களுக்கு துணையாக இருந்த பெண் தோழியின் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.