பொதுவாக கூகுளில் Incognito Modeல் பயனர்கள் தங்களது தனிப்பட்ட தரவுகளை தேடிக்கொண்டிருந்தனர். இதனால் தங்களது தகவல்கள் சேமிக்கப்படாது என ஒரு நம்பிக்கை இருந்து வந்தது. இந்நிலையில் Incognito Mode-ல் பயனர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் புதிய நடைமுறை ஒன்றை கூகுள் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.

கூகுள் க்ரோமின் Incognito Modeல் பயனாளர்களுக்கு ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’ என்ற எச்சரிக்கை வாசகத்தை புதிதாக சேர்த்துள்ளது. இதில் கூகுள் மட்டுமல்லாமல், நாம் தேடும் மற்ற இணையதளங்களும் சம்பந்தப்பட்டுள்ளதால் பயனாளர்கள் கவனமாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.