
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கூகுள் மேப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக புதிதாக வெளியூர் செல்பவர்கள் பலரும் சில இடங்களை அடைவதற்கு கூகுள் மேப் உதவியை நாடுவார்கள்.
அதன்படி நீலகிரிக்கு சுற்றுலா சென்ற கர்நாடக இளைஞர்கள் சிலர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது கூகுள் மேப் காட்டிய வழியில் சென்று அவர்கள் செங்குத்தான படிக்கட்டு வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து உள்ளூர் மக்கள் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடிய பிறகு சாலைக்கு கார் கொண்டுவரப்பட்டு புறப்பட்டு சென்றனர்.