
அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் அளிக்கப்படும் போனஸ் தொகையை போன்று தனியார் நிறுவனங்களும் தனது ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் போனஸ் தொகை அளிக்கின்றனர். அதிலும், ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்கள் எதிர்பாராத சமயங்களில் அவர்களுக்கான போனஸை அறிவித்து அவர்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்து விடுகின்றனர். அந்தவகையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் அதிக அளவு லாபம் ஈட்டியுள்ளது.
இதனை ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில், 8 மாத ஊதியத்தை போனஸாக வழங்கி அந்நிறுவனம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும், மிக மூத்த பதவிகளில் இருப்பவர்களுக்கு இந்த போனஸ் பொருந்தாது எனவும் கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு இதை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.