தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில் 15 மற்றும் 16 விடுமுறை. இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஜனவரி 17ஆம் தேதி மட்டும் வேலை நாளாக இருந்த நிலையில் அன்றைய தினம் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில் அரசு அந்த கோரிக்கையை நிறைவேற்றியது. இதன் காரணமாக ஜனவரி 17ஆம் தேதி விடுமுறை வழங்கிய நேற்று உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் தற்போது பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. அதாவது செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை வரும் நிலையில் அதற்கு முந்தைய தினங்களான சனி ஞாயிறு விடுமுறையாக இருக்கும் நிலையில் திங்கள் கிழமை மற்றும் வேலை நாள். அந்த திங்கள்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டால் மொத்தம் 9 நாட்கள் விடுமுறை வந்துவிடும். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 13ஆம் தேதி சிதம்பரம் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக அந்த மாவட்டத்திற்கு மட்டும் பொங்கல் பண்டிகையில் மொத்தம் 9 நாட்கள் விடுமுறை வருகிறது.