தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி இன்று முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது.
தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாட பலரும் பேருந்துகளில் படையெடுத்து சொந்த ஊர் சென்றுள்ளனர். இன்றும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.