
தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் தற்போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு 12-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் நிலையில், 4 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 18-ம் தேதியும், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி முதலும் கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீடிக்க படலாம் என்று தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களுக்கு விடுமுறை அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில் இது தொடர்பாக நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பள்ளிகள் திறப்பு குறித்த ஆய்வு செய்யும் காலநிலை மேலாண்மை குழு இது குறித்த முடிவை எடுக்கும் என்று பதில் வழங்கினார். அவர்கள் தரும் விளக்கத்தின் அடிப்படையில் ஜூன் மாதம் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது முடிவு செய்யப்படும். மேலும் அதைப் பொறுத்து கோடை விடுமுறை நீட்டிப்பு குறித்தும் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.