
ஏப்ரல் மாதத்தில் நான்கு நாட்கள் அரசு விடுமுறை வருகின்றது. அதன்படி ஏப்ரல் 9 உகாதி, ஏப்ரல் 11 ரம்ஜான், ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 21 மகாவீர் ஜெயந்தி ஆகிய நாட்கள் அரசு பொது விடுமுறை ஆகும். இதில் ஏப்ரல் 14 மற்றும் 21 ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் இரண்டு நாள் கூடுதல் விடுமுறை கிடைக்காது. இது தவிர ஏப்ரல் 19 தேர்தல் விடுமுறை, 4 சனிக்கிழமைகள், 4 ஞாயிற்றுக்கிழமை என மொத்தம் 11 நாட்கள் விடுமுறை உள்ளது. இதைப் பொறுத்து உங்கள் பயணத்தை திட்டமிடுங்கள்.