
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிய பாபு சமுத்திரம் ஆலஞ்சோலை வீதியில் ஜெயப்பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஜெயபிரகாஷ் எடையபட்டியை சேர்ந்த கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு பிறந்த ஏழு மாதமே ஆன சச்சிக்கா என்ற பெண் குழந்தை உள்ளது. பிரசவத்திற்காக கனிமொழி தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனையில் ஜெயப்பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வர செல்லவில்லை.
அவரது பெற்றோர் மட்டுமே சென்று அழைத்து வந்தனர். வீட்டுக்கு வந்த பின்னரும் ஜெயபிரகாஷ் தனது மனைவியிடம் சரியாக பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கனிமொழி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கனிமொழியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனிமொழி பிரதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.