
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரியும் சாந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சுந்தரி என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒரு திருமண தகவல் மையத்தின் மூலமாக கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகமாகினர். இதைத்தொடர்ந்து பெற்றோர் சம்பந்தத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தன்னுடைய மனைவியை சாந்தகுமார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார்.
அதோடு நீ மிகவும் குண்டாக இருக்கிறாய் என்றும் உருவ தோற்றத்தை கேலி செய்துள்ளார். அதாவது திருமணத்திற்கு முன்பாக அழகாக இருந்த சுந்தரி தற்போது குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூறி அழகை இழந்தது சாந்தகுமாருக்கு பிடிக்கவில்லை. இதனால்தான் அடிக்கடி வரதட்சனை கேட்டு துன்புறுத்தியுள்ளார். இதனை தட்டி கேட்ட சுந்தரியின் பெற்றோரையும் அவர் தாக்கியுள்ளார். இந்நிலையில் நேற்று அவருடைய மகன் மற்றும் சுந்தரியின் தந்தை ஆகியோர் மீது சாந்தகுமார் மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்தினார். இதனால் சுந்தரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.