
மதுரையில் 2 கோடி ரூபாய் கேட்டு சிறுவனை கடத்திய IAS அதிகாரி ரஞ்சித் குமாரின் மனைவி சூர்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அதாவது கடத்தப்பட்ட சிறுவனின் தந்தையிடம் நிலம் வாங்வுவதற்கு ரூ.25 லட்சம் சூர்யா கொடுத்ததாகவும் பணம் பெற்ற ராஜ்குமார் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது மனைவியிடம் சூர்யா பணத்தை கேட்டுள்ளார். அவர் பணத்தை கொடுக்க மறுத்ததால் சிறுவனை கடத்தியதாக கூறப்படுகிறது. ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய சம்பவத்தில் சூர்யாவை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் திடீரென்று தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.