வேலூரைச் சேர்ந்த கந்தனேரி பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குமார் (30). இவர் அதே பகுதியில் மெக்கானிக் ஷாப் ஒன்று வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிரவீனா என்ற மனைவியும், 1 வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. இந்நிலையில் கடந்த வருடம் பிரவீனா தனது  குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது ஒரு வருடம் கழித்து பிரவீனாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.

அதாவது பிரவீனாவின் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதால் மனமுடைந்த பிரவீனா தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட எஸ்.பிக்கு, கமிஷனர் அவரது கணவர் குமாரை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி காவல்துறையினர் குமாரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.