
தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகுல். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14, 15, 16, 17 வயது சிறுவர்களுடன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அதேபோல 13 மற்றும் 12 வயது சிறுவர்கள் குளிப்பதற்காக வந்தனர்.
அப்போது ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து 12 மற்றும் 13 வயது சிறுவர்களை தாக்கி மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்களின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ராகுலும், அவரது நண்பர்களான 4 சிறுவர்களும் இணைந்து சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனால் ராகுலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற 4 சிறுவர்களையும் தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.