
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹடம்டா கிராமத்தில் பாண்டு முண்டா மற்றும் அச்சு முண்டா என்ற சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய தந்தையின் சகோதரரின் அதாவது பெரியப்பாவின் மகன் கங்கு முண்டா. இவருக்கு 35 வயது ஆகிறது.
இவர்களுக்குள் சொத்து தகராறு நீண்ட காலமாக நிலவி வந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காக கங்கு சென்றுள்ளார். அப்போது அச்சு மற்றும் பாண்டு இருவரும் அங்கு சென்றனர். அவர்கள் இருவரும் தங்கள் கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் கங்கு கொடூரமாக கொத்தி கொலை செய்தனர்.
இதைத்தொடர்ந்து பாண்டு போலீஸ் ஸ்டேஷனில் தானாக சென்ற சரண் அடைந்த நிலையில் அச்சு தலைமறைவாகிவிட்டார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.