
திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருட வருடம் மாலை அணிந்து விரதம் இருந்து சென்று தசரா கொண்டாடுவார்கள். அதே போன்று கடந்த மாதம் இந்த வருடத்திற்கான தசரா கொண்டாட்டம் கோலமாக முடிவடைந்திருந்தது.
இந்நிலையில் முத்தாரம்மன் கோவிலில் உண்டியலில் இருந்த காசு பணம் எண்ணப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி தொடங்கி இந்த நவம்பர் 20ஆம் தேதி வரை உண்டியல் பணம் எண்ணப்பட்டது. அதன்படி உண்டியல் காணிக்கை மூலமாக ₹47.55 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.