சென்னையில் கடந்த 5-ம் தேதி ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று காலை சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கு அவர் ஆம்ஸ்ட்ராங் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அவருடைய மனைவியை சந்தித்து பேசி அவருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின், இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்று உறுதி கொடுத்தார். அதோடு அவருடைய குடும்பத்தினருக்கு தமிழக அரசு உறுதுணையாக நிற்கும் என்றும் கூறினார். மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மாயாவதி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை எனவும் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.