கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பதினெட்டாவது ஐபிஎல் திருவிழாவானது நாளை நடைபெறுகிறது. மே 25 வரை இந்த போட்டியானது நடைபெறுகிறது. இதில் விளையாடும் 10 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட பத்து அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுடைய பிரிவில் மற்ற அணிகளோடு தலா இரண்டு முறை மோத வேண்டும். அடுத்த பிரிவில் உள்ள ஒரு அணியோடு மட்டும் வரிசைப்படி இரண்டு தடவை விளையாட வேண்டும். மற்ற நான்கு அணிகளோடு  தலா ஒரு முறை விளையாட வேண்டும். கடைசியில் புள்ளி அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

மே 18ஆம் தேதியோடு லீக் ஆட்டம் ஆனது முடிவடைகிறது. பிளே ஆப் சுற்று மே 20 ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 58 நாட்கள் லீக் ஆட்டங்கள் நடைபெறும். இதில் 12 நாட்கள் மட்டுமே இரண்டு போட்டிகள் நடைபெறும். மற்ற தினங்களில் ஒரே ஒரு ஆட்டம் நடைபெறும். ஐபிஎல் போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன், ஜியோ ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்த சீசனின் முதல் போட்டியான கொல்கத்தா பெங்களூர் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் அன்றைய தினம் கொல்கத்தாவில் 70 முதல் 90% வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை கூறுகிறது. மேலும் தற்போது அங்கு லேசாக மழை பெய்து வருகிறது. இதனால் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.