கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு முதல்வராக பினராயி விஜயன், 2வது முறை ஆட்சியை பிடித்து உள்ளார். முற்போக்கு சிந்தனை கொண்ட அவர் விழாக்களில் கலந்துகொள்ளும்போது சீர்திருத்த கருத்துக்களை கூறுவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் கண்ணூரில் ஸ்ரீ நாராயணா கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கேரள முதல்வர் கலந்துகொண்டார்.

அப்போது நிகழ்ச்சி துவங்கியதும், முதலில் குரு வணக்கம் பாடல் பாடப்பட்டது. இந்நிலையில் மேடையிலிருந்த முதல்வர், பாடல் பாடும்போது எழுந்து நிற்கவில்லை. மற்ற அனைவரும் எழுந்து நின்றபோது அவரும், மார்க்சிஸ்டு எம்எல்ஏ கடனபள்ளி ராமச்சந்திரனும் அமர்ந்தே இருந்தனர். இதன் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.