ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 45 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய் தன் கைக்கு கிடைத்த கட்சியை சீரழித்து சின்னா பின்னமாக்கி தோல்வி மேல் தோல்வி கண்ட தோல்வி சாமி.

இல்லாத பொய்களை வீசுவதை அன்றாட அலுவலாக வைத்துள்ளார். அதனால் தான் மக்களை சந்திக்க முடியாமல், திமு கழகத்தை எதிர்க்க துணிவில்லாமல் தேர்தலை சந்திக்காமல் ஓடி ஒளிந்து கொண்டார் என்று விமர்சனம் செய்துள்ளார்.