
குன்னூரில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1077 மற்றும் 9443763207 என்ற எண்களில் விபத்துக்கு குறித்து தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் அது உடல்நிலை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.